திமுகவுடனா..? தவெகவுடன் கூட்டணியா? உறுதி செய்த விஜய பிரபாகரன்

DMK DMDK Thamizhaga Vetri Kazhagam
By Sumathi Jun 06, 2025 01:30 PM GMT
Report

தேமுதிக கூட்டணி குறித்து விஜய பிரபாகரன் தகவல் பகிர்ந்துள்ளார்.

தேமுதிக கூட்டணி

கரூர், ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில் தேமுதிக ஒன்றிய செயலாளர் சின்னசாமி இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில், தேமுதிக இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

vijaya prabakaran - vijay

அப்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

தேமுதிகவைக் கரைத்த பிரேமலதா - கட்டம் கட்டி அடிக்கும் அதிமுக

தேமுதிகவைக் கரைத்த பிரேமலதா - கட்டம் கட்டி அடிக்கும் அதிமுக

விஜய பிரபாகரன் தகவல் 

“தேமுதிக வளர்ச்சியை நோக்கி செல்வது சந்தோசமாக உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி. ஆனால், தற்போது தேமுதிக வளர்ச்சியை நோக்கி தான் எங்கள் நிலைப்பாடு உள்ளது.

திமுகவுடனா..? தவெகவுடன் கூட்டணியா? உறுதி செய்த விஜய பிரபாகரன் | Vijaya Prabhakaran About Allaince Dmk Tvk

ஜனவரி 9 கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணியை பற்றி அறிவிப்பார். 2026-ல் தமிழக வெற்றி கழகம் விஜயுடன் கூட்டணி அமைப்போமா என்ற கேள்விக்கும் ஜனவரி 9 தான் பதில் தெரியவரும்” எனத் தெரிவித்துள்ளார்.