தகாத உறவில் விஜய் ஏசுதாஸ் மனைவி; தனுஷ் தான் காரணம் - பகீர் கிளப்பிய பிரபலம்!

Dhanush Tamil Cinema Bayilvan Ranganathan
By Sumathi Apr 23, 2024 05:30 PM GMT
Report

விஜய் யேசுதாஸ் மனைவி குறித்து பயில்வான் ரங்கநாதன் பகீர் கிளப்பியுள்ளார்.

விஜய் யேசுதாஸ்

தமிழ் தென்னிந்திய சினிமாவில் பிரபல பாடகராகவும், தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும் அறியப்பட்டவர் விஜய் ஏசுதாஸ்.

vijay yesudas with dhanush

தமிழ், மலையாளம் தெலுங்கு, கன்னடம் மற்றும் துலு உள்ளிட்ட மொழிகளில் பின்னணி பாடகராக அசத்தி வந்தார். 2007ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் தோழியான தர்ஷனாவை திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன்,

வீட்டுக்கே வராத தனுஷ் - அமலாபால் அப்பர்ட்மெண்ட் சென்று எச்சரித்த ரஜினி!

வீட்டுக்கே வராத தனுஷ் - அமலாபால் அப்பர்ட்மெண்ட் சென்று எச்சரித்த ரஜினி!

விவாகரத்து 

விஜய் யேசுதாஸின் மனைவியான தர்ஷனா வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுசுக்கு வில்லனாக நடித்த அமிதாஷ் பிரதான் உடன் ரகசிய தொடர்பு உண்டு. அவருடன் கள்ளக்காதலில் இருந்து வந்ததால் இந்த விஷயம் தனது கணவர் மற்றும் உறவினர்களுக்கு தெரிய வர நகை தொலைந்து விட்டதாக கூறி நாடகமாடினார்.

தகாத உறவில் விஜய் ஏசுதாஸ் மனைவி; தனுஷ் தான் காரணம் - பகீர் கிளப்பிய பிரபலம்! | Vijay Yesudass Wife Affair With Tamil Actor

இவர்களின் இந்த கள்ள உறவுக்கு காரணமாக இருந்ததே நடிகர் தனுஷ் தான் .அந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வேடிக்கை பார்க்க சென்ற தர்ஷனாவை தனுஷ் தான் அமிதாஷிடம் அறிமுகப்படுத்தினார்.

பின்னர் அவர்கள் இருவரும் பார்ட்டி, பப் என நெருக்கமாக பழகி கள்ள உறவில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.