என் விவாகரத்து அவங்களைதான் ரொம்ப பாதித்தது - மெளனம் உடைத்த விஜய் யேசுதாஸ்

Sumathi
in பிரபலங்கள்Report this article
தனது விவாகரத்து குறித்து விஜய் யேசுதாஸ் மனம் திறந்துள்ளார்.
விஜய் ஏசுதாஸ்
தமிழ் தென்னிந்திய சினிமாவில் பிரபல பாடகராகவும், தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும் அறியப்பட்டவர் விஜய் ஏசுதாஸ்.
தமிழ், மலையாளம் தெலுங்கு, கன்னடம் மற்றும் துலு உள்ளிட்ட மொழிகளில் பின்னணி பாடகராக அசத்தி வந்தார். 2007ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் தோழியான தர்ஷனாவை திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
விவாகரத்து
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள விஜய் ஏசுதாஸ், எங்களுடைய பிரிவு மூலமாக நான் பாதிப்புக்கு ஆளானதை விட எனது குடும்பத்தினர் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். என்னுடைய குழந்தைகளுக்கு எப்போதும் சந்தோசம் கொடுக்கும் விதமாக என்னை அமைத்து கொண்டேன்.
இப்போது குழந்தைகள் என்னுடன் இருக்கிறார்களா அல்லது அவர்களுடைய அம்மாவுடன் இருக்கிறார்களா என்பதை நான் சொல்ல தேவையில்லை. அவர்களுக்கு எங்கு சந்தோசமாக இருக்கிறதோ அங்கே இருக்கிறார்கள்.
விவாகரத்தால் நான் சோகத்தில் இருக்கிறேனா என்றால் நிச்சயமாக அதற்கெல்லாம் எனக்கு நேரமே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.