சீமானுக்கு பிறந்த நாள்.. போன் கால் செய்த நடிகர் விஜய் - கூட்டணியா?
நடிகர் விஜய் சீமானுக்கு போனில் அழைத்து வாழ்த்து கூறியுள்ளார்.
சீமான் பிறந்தநாள்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 57- வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாரதிராஜா, கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் எக்ஸ் தளம் மூலமாகத் தங்களது வாழ்த்து பதிவைப் பகிர்ந்தனர்.
விஜய் அழைப்பு
இந்நிலையில், நடிகர் விஜய்யும் சீமானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் என நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி பாக்கியராசன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே சீமான், விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்கக் கூடும் என்ற கருத்துக்கள் எழுந்த நிலையில், தற்பொழுது நடிகர் விஜய் சீமானுக்கு அழைத்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.