அரசியலுக்கு விஜய் வரார் - அதான் அனுமதி தரல- சீமான்
நடிகர் விஜய் "லியோ" படத்தின் ஆடியோ லான்ச் மறுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு அரசியல் தான் காரணம் என நாம் தமிழர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
லியோ ஆடியோ லான்ச்
விஜய்யின் அரசியல் வருகை நீண்ட காலமாக தமிழக அரசியல் காலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது. தொடர்ந்து தன் சங்க நிர்வாகிகளை சந்திப்பதும், நலத்திட்டங்களை வழங்குவதும் போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் விஜய், விரைவில் தனி கட்சி துவங்கி தீவிர அரசியலில் ஈடுபடப்போகிறார் என்ற கருத்துக்களும் தமிழக அரசியல் களத்தில் எதிரொலித்து வருகின்றது.
இந்நிலையில், தற்போது அவரின் லியோ படத்திற்கு அரசியல் அழுத்தம் காரணமாக ஆடியோ லான்ச் நிகழ்ச்சி ரத்தாகி இருப்பதாக கூறப்படுகிறது.இதனை படக்குழு மறுத்துள்ள நிலையில், பலரும் அரசியலே இதில் முக்கிய காரணம் என தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாமாக முன்வந்து பதிலளித்த சீமான்நேரு உள்விளையாட்டு அரங்கில் அனுமதியை கோரிய நிலையில், இதனை ரத்து செய்ததற்கு ஏ.ஆர்.ரகுமானின் நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி விஜய்க்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை கடுமையாக விமர்சத்தார்.
எதற்காக மறுக்கவேண்டும்
நிகழ்ச்சிக்கு கேட்கப்படும் முன்னேற்பாடுகளை தமிழக அரசும் காவல்துறையும் தான் செய்து தரவேண்டும் என கூறிய சீமான், கட்சி நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அனைத்து மாநாடுகளையும் நடத்தி, இதற்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என வினவினார்.
எதற்காக இந்த நெருக்கடியை விஜய்க்கு அளிக்கிறார்கள் என கேள்வி எழுப்பிய சீமான், ஜெயிலர் படத்தின் நிகழ்ச்சிக்கு மட்டும் அனுமதியும் பாதுகாப்பும் அளித்து விட்டு, தற்போது விஜய்க்கு மட்டும் மறுப்பது அரசியல் காரணங்கலினால் தான் என குற்றம்சாட்டினார்.
மேலும், பந்தை எவ்வளவு தான் அழுத்தினாலும், பந்து வெளிவர வேண்டும் என முடிவெடுத்து விட்டால் நிச்சயமாக வந்து விடும் என விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை முன்வைத்த அவர் எவ்வளவு குப்பை கொட்டினாலும் நெருப்பு எரிய துவங்கிவிட்டால் நிச்சயமாக எரியும் என தெரிவித்துள்ளார்.