விஜய் ஏன் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசுவதில்லை?
திருப்பரங்குன்றம் விவகாரம் அல்லது கவின் ஆணவ கொலை போன்ற உணர்வுப்பூர்வமான சம்பவங்களில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மௌனம் காப்பது குறித்து பல விவாதங்கள் எழுகின்றன.
விஜய் வியூகம்
எந்த ஒரு விவகாரத்தில் எப்போது பேச வேண்டும் அல்லது எப்போது மௌனம் காக்க வேண்டும் என்பது ஒரு தலைவரின் தனிப்பட்ட ஜனநாயக உரிமை.

விஜய் தன்னை மற்ற திராவிட கட்சிகளின் வார்ப்பாகவோ அல்லது அவர்களின் அரசியல் பாணியை பின்பற்றுபவராகவோ காட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஏற்கனவே களத்தில் உள்ள கட்சிகள் ஒரு பிரச்சனையை அணுகும் முறையிலேயே விஜய்யும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.
தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி தனது அரசியல் நகர்வுகளை சிதைத்துக்கொள்ளாமல், தனது இலக்கான 2026 தேர்தலை நோக்கி நிதானமாக பயணிக்கிறார். இந்த மௌனம் என்பது பலவீனத்தின் அடையாளம் அல்ல,
மாறாக எதிரிகளுக்கு தனது நிலைப்பாட்டை தீனியாக கொடுக்க விரும்பாத ஒரு முதிர்ச்சியான அரசியல் வியூகம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.