திமுகவில் சீட்டுக்கு முண்டியடிக்கும் சீனியர்கள் - தட்டிச்செல்லும் இளைஞரணியினர்..
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் இளைஞரணி கோட்டாவில் இந்த முறை அதிக சீட் ஒதுக்கப்படும் என தகவல் பரவி வருகிறது.
திமுக இளைஞரணி
இதனால் சீட் பெறுவதில் இளைஞரணி நிர்வாகிகளுக்கும் அங்கிருக்கும் சீனியர்களுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் எபினேசர் சென்னை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

எனுனும் அந்த தொகுதியைக் குறிவைத்து செய்தி தொடர்பு இணை செயலாளர் சையது ஹபீஸ் முயன்று வருகிறார். செங்கல்பட்டு எம்.எல்.ஏ-வாக வரலட்சுமி மதுசூதனன் கடந்த பத்து வருடங்களாக இருந்துவரும் நிலையில்,
தலைமை முடிவு
இந்த முறை இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக் செங்கல்பட்டு தொகுதியைக் குறிவைத்து தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளார். ராயபுரம் தொகுதியில், சிட்டிங் எம்.எல்.ஏ ஐடிரீம்ஸ் மூர்த்தி மீது சலசலப்பு இருக்கும் நிலையில், சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் பழ.செல்வகுமார் ராயபுரம் தொகுதியில் தேர்தல் பணிகளை ஆரம்பித்திருக்கிறார்.

இவ்வாறு தமிழ்நாடு முழுவதுமே இளைஞரணி நிர்வாகிகள் சட்டமன்றத் தொகுதிகளைக் குறிவைத்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். அண்மையில் திருவண்ணாமலையில் நடந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், எதிர்வரும் தேர்தலில் இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்.
திமுக இளைஞர்கள் என்ன செய்தார்கள் என்று பார்த்துவிட்டு இளைஞர்களுக்கு அதிக இடங்கள் கொடுக்க வேண்டும் என மேடையிலேயே திமுக தலைவர் ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.