G.O.A.T; மீண்டும் திரையில் கேப்டனுடன் இணையும் தளபதி விஜய் - பிரேமலதா ஒப்புதல்!
நடிகர் விஜய் நடிக்கும் 'GOAT' படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏஐ மூலம் திரையில் கொண்டு வருவதற்கு பிரேமலதா அனுமதி அளித்துள்ளார்.
திரையில் கேப்டன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கும் 'GOAT' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. செப்டம்பர் 5 -ம் தேதி ரிலீஸ் என அறிவித்த பின்பு படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் புரோமோஷனும் சூடு பிடித்துள்ளது. இதில், ஏராளமான நட்சத்திரப் பட்டாளமே இணைந்திருக்கிறது.

ஆனால்,படத்தில் அறிவிக்கப்படாத இரண்டு சர்ப்ரைஸைகளை குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளது. அதில், ஒன்று மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் படத்தில் நடிக்க வைக்க இருப்பது என்று தெரியவந்துள்ளது.
பிரேமலதா ஒப்புதல்
இதற்கான அனுமதி பெற இயக்குநர் வெங்கட்பிரபு, விஜயகாந்த் மனைவி பிரேமலதாவை சந்தித்து இருக்கிறார். பிரமேலதா உடனே சம்மதம் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், ”கேப்டன் உயிரோடு இருந்திருந்தால் தனது தம்பி விஜய்க்காக மறுக்காமல் படத்தில் நடித்துக் கொடுத்திருப்பார்” என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

நடிகர் விஜய் முதல்முறை அறிமுகமானது விஜயகாந்த் ஹீரோவாக நடித்த ‘வெற்றி’ படத்தில்தான்.பிறகு ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து கைகொடுத்தது விஜயகாந்த்தான். இப்போது அவர் மறைந்தும் விஜய் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மீண்டும் வருகிறார்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil