ஆர்.கே.செல்வமணி - சரத்குமார் வரை..! Captain வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திறமைகள்..!
தமிழ் திரையுலகிற்கு எண்ணற்ற திறமைகளை அறிமுகப்படுத்தியவர் விஜயகாந்த்.
சரத்குமார்
அதில் முதல் இடத்தில் வருபவர் சரத்குமார். விஜய்காந்த் நடிப்பில் வெளியான புலன் விசாரணை படத்தில் தான் முதல் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார் சரத்குமார். அதனை தொடர்ந்து தான் தனி ஹீரோவாக உருப்பெற்று பல தொடர் வெற்றி படங்களை சரத்குமார் கொடுத்தார்,.
இன்றளவும் பேட்டிகளில் தனக்கு விஜயகாந்த் மீதிருக்கும் அன்பு குறித்து வெளிப்படையாகவே கூறி வருகின்றார் சரத்குமார்.
ஆர்.கே.செல்வமணி
மணிவண்ணனின் துணை இயக்குனராக இருந்த ஆர்.கே.செல்வமணி இயக்குனராக அறிமுகமான முதல் படம் புலன் விசாரணை(1990). அப்படத்தின் மாபெரும் வெற்றி மீண்டும் விஜயகாந்திற்கு படம் இயக்கினார் ஆர்.கே.செல்வமணி.
அப்படமே கேப்டன் பிரபாகரன்(1991). இன்றளவும் மக்கள் விஜயகாந்தை கேப்டன் என்று அழைக்க வித்திட்டது இப்படம் தான்.
மன்சூர் அலி கான்
கேப்டன் பிரபாகரன்(1991) படத்தில் தான் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகினார் மன்சூர் அலி கான்.
அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழை தாண்டி தென்னிந்திய மொழி படங்களில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தினார் மன்சூர் அலி கான்.
ஆபாவாணன் - அரவிந்த்ராஜ்
திரைப்பட மாணவரான ஆபாவாணன் கதைவசனத்தில் முதல் படம் ஊமை விழிகள்(1986). அப்படத்தை இயக்கியவர் அரவிந்த்ராஜ். முதல்முறையாக தமிழ் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு திரையில் வாய்ப்பளித்தவர் விஜயகாந்த் தான்.
ஊமை விழிகள் படத்தையடுத்து உழவன் மகன்(1987), காவிய தலைவன் போன்ற வெற்றி படங்களிலும் விஜயகாந்த் - ஆபாவாணன் - அரவிந்த்ராஜ் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.
கௌவர தோற்றங்கள்
விஜயகாந்த் நட்பிற்காக பல படங்களில் கௌவரத் தோற்றத்திலும் நடித்துள்ளார். அதில் முக்கிய படம் செந்தூரப்பாண்டி(1993). விஜய் இந்த படத்தின் மூலம் தான் அனைத்து தரப்பு மக்களிடம் சென்று சேர்ந்தார் என்று கூறும் அளவிற்கு அப்போதைய விஜயகாந்தின் மார்க்கெட் உதவியது.
எஸ்.ஏ.சி இயக்கத்தில் உருவான பெரியண்ணா படத்தில் மீண்டும் கௌரவ தோற்றத்தில் சூர்யாவுடன் நடித்தார்
விஜயகாந்த். ராம்கி, விவேக் நடிப்பில் உருவான விஸ்வநாதன் ராமமூர்த்தி(2001) படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்தார் விஜயகாந்த். இதற்கு அவருக்கு ராம நாராயணனிடம் கொண்ட நட்பும் காரணமாக கூறலாம்.