இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி - விஜய் முக்கிய அறிவிப்பு

Vijay Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Sep 08, 2024 06:01 AM GMT
Report

 தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விஜய்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 

vijay tvk

கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்ய கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியா தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் செய்திருந்தனர். 

தவெக மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி இல்லை; நேரம் இதுதான் - விஜய் தரப்பில் பதில்

தவெக மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி இல்லை; நேரம் இதுதான் - விஜய் தரப்பில் பதில்

தேர்தல் ஆணையம்

இந்நிலையில், விண்ணப்பத்தை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், தற்போது பதிவு செய்யப்பட்ட கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இது குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது.

மாநாடு

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது. இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 

திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள். தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம்" என தெரிவித்துள்ளார்.

கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை, தவெக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மேலும் செப்டம்பர் 21 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தவெக மாநாட்டிற்கு தற்போது காவல் துறை அனுமதி கிடைத்துள்ள நிலையில் விஜய் அது பற்றி எதுவும் அறிவிக்கவில்லை.