பிக்பாஸ் சீசன் 8; விலகிய கமல்..அடுத்தது யார்? விஜய் டிவி வெளியிட்ட திடீர் அறிக்கை!

Kamal Haasan Bigg Boss
By Swetha Aug 09, 2024 09:00 AM GMT
Report

பிக்பாஸில் கமல்ஹாசன் விலகியது தொடர்பாக விஜய் டிவி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

விலகிய கமல்..

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள கமல்ஹாசன், விஜய் டிவியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்தார். இதன் 8வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. ந்த முறையும் கமல் தொகுத்து வழங்குவார் என கூறப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 8; விலகிய கமல்..அடுத்தது யார்? விஜய் டிவி வெளியிட்ட திடீர் அறிக்கை! | Vijay Tv Statement About Kamalhaasan Biggboss Exit

ஆனால் பல படங்களில் அவர் பிஸியாக இருப்பதால் நிகழ்ச்சியிலிருந்து விவலகுவதாக சில தினங்களுக்கு முன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக கமல் வெளியிட்ட அறிக்கையில், ‛‛கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுக்கிறேன்.

7 ஆண்டுகால பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சிறு ஓய்வை எடுக்கிறேன். எனது சினிமா தொடர்பான என தெரிவித்துள்ளார்.இதனிடையே கமல் விலகியதற்கு பின்னர் அடுத்த பிக்பாஸ் தொகுப்பாளர் யார் என்கிற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

கமல்ஹாசன் ஒரு திருநங்கை?.. விடீயோவ மியூட்ல பாருங்க தெரியும் - பகீர் கிளப்பிய பிரபலம்!

கமல்ஹாசன் ஒரு திருநங்கை?.. விடீயோவ மியூட்ல பாருங்க தெரியும் - பகீர் கிளப்பிய பிரபலம்!

 விஜய் டிவி 

அடுத்த தொகுப்பாளரை தேர்வு செய்யும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகியது பற்றி விஜய் டிவி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.அதில் 7 ஆண்டுகளாக ஈடு இணையில்லாத பங்களிப்பை கொடுத்த கமல் சாருக்கு நன்றி,

பிக்பாஸ் சீசன் 8; விலகிய கமல்..அடுத்தது யார்? விஜய் டிவி வெளியிட்ட திடீர் அறிக்கை! | Vijay Tv Statement About Kamalhaasan Biggboss Exit

நீங்கள் ஆடியன்ஸோடு மட்டுமல்லாமல், போட்டியாளர்களிடமும் பேசி அவர்களிடம் இருக்கும் சிறந்ததை வெளிக்கொண்டு வந்தீர்கள். அதனால் தான் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்தியாவில் நம்பர் 1 ரியாலிட்டி ஷோவாக உருவெடுத்தது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து பிரேக் எடுப்பதாக நீங்கள் அறிவித்திருப்பது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. இருந்தாலும் உங்களின் காரணங்களை மதிக்கிறோம், உங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம். நீங்கள் இல்லா பிக்பாஸை மிஸ் பண்ணுவோம்,

ஆனால் ஒரு தொகுப்பாளராக நீங்கள் விட்டுச்சென்ற லெகஸி என்றென்றும் எங்களை ஊக்குவிக்கும். உங்களின் சினிமா கெரியருக்கு வாழ்த்துக்கள். இந்த பிக்பாஸ் சீசனையும் சக்சஸ்புல்லாக தொடர்ந்து நடத்துவோம் என குறிப்பிட்டு உள்ளனர். ஆனால் அடுத்த தொகுப்பாளர் பற்றி எந்தவித அறிவிப்பும் அதில் இடம்பெறவில்லை.