அண்ணாமலை போல மிமிக்ரி செய்து அசத்திய விஜய் டிவி குரேஷி - வைரலாகும் Video!

BJP K. Annamalai Tamil TV Shows Tamil Actors Tamil Actress
By Jiyath Apr 14, 2024 12:08 PM GMT
Report

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போல பேசி அசத்தியுள்ளார் விஜய் டிவி பிரபலம் குரேஷி.

குரேஷி 

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு சீசன் 5' நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் குரேஷி. அந்த சீசனில் டைட்டில் வின்னராகவும் இவர் தேர்வானார்.

அண்ணாமலை போல மிமிக்ரி செய்து அசத்திய விஜய் டிவி குரேஷி - வைரலாகும் Video! | Vijay Tv Kuraishi Mimicked Bjp Annamalai

இதனையடுத்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது மிமிக்ரி திறமையால் ரசிகர்களை மகிழ்வித்தார். மேலும், 'குக் வித் கோமாளி' நிகழ்சசியில் கலந்து கொண்டதன் மூலம் இவரின் ரசிகர்கள் எண்னிக்கை அதிகரித்தது.

கொளுத்தும் கோடை வெயில்; மன்சூர் வீட்டில் மட்டும் தினமும் மழை - அதெப்படி..?

கொளுத்தும் கோடை வெயில்; மன்சூர் வீட்டில் மட்டும் தினமும் மழை - அதெப்படி..?

அண்ணாமலை 

அதேபோல் சரவணன் இருக்க பயமேன் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து நடித்திருந்தார். இந்நிலையில் குரேஷி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போல பேசி மிமிக்ரி செய்து அசத்தியுள்ளார்.

அண்ணாமலை போல மிமிக்ரி செய்து அசத்திய விஜய் டிவி குரேஷி - வைரலாகும் Video! | Vijay Tv Kuraishi Mimicked Bjp Annamalai

கடந்த 11-ம் தேதி தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது அண்ணாமலை ரமலான் வாழ்த்து கூறுவதை போல பேசி வீடியோ ஒன்றரை வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரது பாராட்டை பெற்று வருகிறது .