விஜய் டிவி தீனாவுக்கு கல்யாணம் - வெட்கத்துடன் பேசிய நடிகர்!

Vinothini
in பிரபலங்கள்Report this article
காமெடி நடிகர் தீனா தற்போது தனது திருமணம் குறித்து அவரே வெளிப்படையாக பேசியுள்ளார்.
தீனா
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது மிமிக்ரி மற்றும் பாடி லாங்வேஜ் காமெடி மூலம் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர் தீனா.
இவரது சொந்த ஊர் திருவாரூர். இவர் அதன் பிறகு ஆங்கரிங் செய்தார், பின்னர் படி படியாக வளர்ந்து தமிழ் சினிமாவில் நடித்துள்ளார்.
இவர் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் தனது சொந்த ஊரில் வீடு காட்டியுள்ளார்.
திருமணம்
இந்நிலையில், அவர் ஒரு பேட்டியில் பேசியதாவது, "வீட்டை கட்டி பார், கல்யாணத்தை பண்ணி பார்னு சொல்லுவாங்க, அதுபோல வீட்டை கட்டி முடித்ததும் கல்யாணமும் காய் கூடி வந்துள்ளது.
எல்லாம் கடவுளின் ஆசி. மேலும், சொந்தக்காரங்களுக்காக திருவாரூர்ல நடக்கிற கல்யாணத்துல செலிபிரிட்டிகள் ரொம்ப கலந்துப்பாங்களான்னு தெரியல.
அதனாலயே சினிமா, சின்னத்திரைப் பிரபலங்களுக்காக சென்னையிலும் அடுத்த வாரம் திருமண வரவேற்பும் நடத்துறோம்'' என்கிறார்.
மணப்பெண் குறித்துக் கேட்டதும், "அவங்க கிராஃபிக் டிசைனரா இருக்காங்க. எங்களுடையது அரேஞ்சுடு மேரேஜ். இனிமேதான் காதலிக்க ஆரம்பிக்கணும்" என்று கூறியுள்ளார்.