அதிகரிக்கும் கள்ளச்சாராய மரணங்கள் - கள்ளக்குறிச்சி விரையும் த.வெ.க தலைவர் விஜய்

Vijay Tamil nadu Kallakurichi Thamizhaga Vetri Kazhagam
By Karthick Jun 20, 2024 12:00 PM GMT
Report

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கள்ளக்குறிச்சி விரைகிறார்.

கள்ளக்குறிச்சி விவகாரம்

தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்கள் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. நேரம் கடக்க கடக்க பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயமும் நீடித்து வருகின்றது

Kallakurichi deaths

தமிழக அரசும் மருத்துவ பணிகளை துரிதப்படுத்தியுள்ள நிலையில், அண்மையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்ரமணியன் போன்றோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

விஜய் கண்டனம்

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் காலையிலேயே கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது.

அரசின் அலட்சியமே காரணம் - கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் கண்டனம்

அரசின் அலட்சியமே காரணம் - கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் கண்டனம்


உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Vijay Kallakurichi

இந்த சூழலை தான் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கள்ளக்குறிச்சி விரையவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளார்.