கட்சியாக பதிவாகும் விஜய் இயக்கம் - டெல்லி விரையும் அமைப்பினர்..! எப்போது பதிவாகிறது..?
விரைவில் நடிகர் விஜய் கட்சி துவங்கவுள்ளார் என்ற கருத்துக்கள் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
விஜய்
அரசியல் நோக்கி தீவிரமாக களமிறங்கியுள்ள தமிழ் சினிமாவின் டாப் நட்சத்திரமான விஜய், இயக்க நிர்வாகிகளை நேற்று சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டே விஜய் மக்கள் இயக்கம் கட்சியாக மாறி, தேர்தல் அரசியல் களம் காணும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்து வரும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
பதிவு செய்ய...
அதாவது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், இயக்கத்தை கட்சியாக மாற்றி பதிவு செய்ய, வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

புஸ்ஸி ஆனந்த் தலைமையில் அமைப்பை சேர்ந்த 25'க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் டெல்லி சென்று இந்த பணியில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.
கொழும்பில் பயங்கரம்: வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சட்டத்தரணி மற்றும் மனைவி - களத்தில் குதிக்கும் CID IBC Tamil
யாழில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன்... மரணத்தின் பின்னணியில் வலுக்கும் சந்தேகங்கள் IBC Tamil