தேர்தலை சந்திக்க தயாராகவும் - அறிவுறுத்திய விஜய்..! அரசியல் கட்சி துவக்கமா..?
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக உருமாறவுள்ள கருத்துக்கள் தற்போது மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
விஜய்
அரசியல் எதிர்காலம் கொண்டு கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜய் பணியாற்றி வருகிறார். இது கடந்த ஆண்டில் மிக தீவிரமானது. மக்கள் இயக்கம் அமைப்பினர் தொடர்ந்து பல உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கல்வி விழா ஒன்றினை விஜய் நடத்தியதும், அதில் 234 தொகுதிகளை சேர்ந்த மாணவ - மாணவியரை அவர் தேர்ந்தெடுத்ததே பெரும் அரசியல் நகர்வாக பலரும் பேசி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து அமைப்பின் ஒவ்வொரு சங்கத்தையும் வலுப்படுத்தி அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனைகளையும் வழங்கி வரும் விஜய், இன்று சென்னை பனையூரில் மீண்டும் நிர்வாகிகளிடத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
அரசியல் கட்சி
அப்போது, எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும், மக்கள் பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்கவும் போன்ற அறிவுரைகளை அவர் அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மக்கள் பணிகளை செய்ய தடை ஏற்பட்டால் உடனடியாக தலைமைக்கு தெரிவிக்கவும் என்றும் விஜய் அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ள நிலையில், விரைவில் தனது இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றவுள்ளாரா? விஜய் என்று மீண்டும் செய்திகள் வேகமெடுக்க துவங்கிவிட்டன.