எடப்பாடி பழனிசாமி கோட்டையில் குறிவைக்கும் விஜய் - ரகசியம் திட்டம் கைகொடுக்குமா?

Vijay Tamil nadu Salem Thamizhaga Vetri Kazhagam
By Karthick Jul 26, 2024 10:04 PM GMT
Report

நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தில் தற்போது பெரிய நடவடிக்கைகள் இல்லாமல் இருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம்

ஆனால், அதே நேரத்தில் கட்சியின் நிர்வாகிகள் பல்வேறு கட்ட நலத்திட்டங்களை வழங்கி, மக்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள். வீடு கட்டி கொடுப்பதில் துவங்கி பலவகையிலும் தொடருகிறது இந்த பணிகள்.

Thamizhaga vetri kazhagam Vijay

இவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் கட்சியின் பொதுச்செயலாளரான ஆனந்த். இந்த நிலையில், விஜய் விரைவில் மாநாடு நடத்தவுள்ளார் என்றும் அதனை தொடர்ந்து அவர் நடைபயணம் துவங்கவுள்ளதாக பேசப்படுகிறது.

Thamizhaga vetri kazhagam Vijay

இது தொடர்பான செய்திகள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், நடவடிக்கைகள் சைலெண்டாக நடந்து வருவதாக பல செய்திகள் வெளிவருகின்றன.

திட்டம் 

இந்த சூழலில் தான், சேலத்தில் பொதுச்செயலாளரான ஆனந்த் 4 இடங்களில் - தலைவாசல், கெஜல்நாயக்கன்பட்டி, காக்காபாளையம் போன்ற பகுதிகளில் இருக்கும் மைதானங்களில் ஆய்வினை செய்தார்.

வீடு கட்டி வழங்குவதற்கு விஜய் காசு கொடுக்கிறாரா? செய்தியாளருக்கு காட்டமாக பதிலளித்த ஆனந்த்!

வீடு கட்டி வழங்குவதற்கு விஜய் காசு கொடுக்கிறாரா? செய்தியாளருக்கு காட்டமாக பதிலளித்த ஆனந்த்!

திடீரென ஆய்வுகள் நடைபெற்றதன் அடிப்படையில் இவை பொதுக்கூட்டத்திற்காக இருக்குமா? என்ற கேள்விகள் அதிகளவில் எழுந்துள்ளது. 4 மண்டலமாக மாநாடு நடத்த திட்டமிட்டதாக முன்னரே செய்தி வெளிவந்திருந்தது இதில் குறிப்பிடத்தக்கது.

Thamizhaga vetri kazhagam Vijay N anand in salem

திருச்சி, மதுரை போன்ற இடங்களில் மாநாடு நடத்த திட்டமுள்ளதாக ஏற்கனவே தகவல் கசிந்த நிலையில் தான் அதனை தொடர்ந்து சேலத்தில் குறிவைக்கிறாரா விஜய் என்ற கேள்விகளும் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.