வீடு கட்டி வழங்குவதற்கு விஜய் காசு கொடுக்கிறாரா? செய்தியாளருக்கு காட்டமாக பதிலளித்த ஆனந்த்!
தமிழக வெற்றிக் கழகம்
நடிகராக இருந்த விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறியுள்ளார். இன்னும் 2 படங்கள் மட்டுமே நடிப்பேன் என கூறியுள்ள அவர், படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். அதே நேரத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
சினிமாவில் பெறும் வரவேற்பிருப்பதால், விஜய் அரசியல் என்ன தான் செய்வார் என்ற ஒரு எதிர்பார்ப்பு நிறைய பேருக்கு உண்டு. நலத்திட்ட பணிகளில் தீவிரம் காட்டி வரும் த.வெ.க நிர்வாகிகள் இலவச வீடு கட்டி வழங்கியுள்ளார்கள்.
திருவள்ளூர் பொன்னேரியில் தொகுதி கட்சி தலைவர் சிலம்பரசன் ஏற்பாட்டின் கீழ் கட்டிக்கொடுக்கப்பட்ட இந்த வீடுகளை புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் த.வெ.க சார்பில் 10 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன
விஜய் காசு கொடுத்தாரா
மேலும் 2 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் ஏழை மக்களுக்கு வீடுகளை வழங்குவார்கள் என்றும் அவர் கூறினார். அப்போது செய்தியாளர் ஒருவர், கட்சி நிர்வாகிகள் காட்டி தரும் வீடுகள், ‘விஜய் ரசிகர் வீடு வழங்கும் திட்டம் என்று தானே பெயர் வைக்க வேண்டும்? என்று வினவினார்.
அதற்கு பதிலளித்த ஆனந்த், “விஷயம் யார் கொடுத்தார்கள் என்பதல்ல. தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன என்பதே விஷயம் என்றார். தொடர்ந்து பேசியவர், இதற்கு தளபதி பணம் கொடுத்தாரா? இல்லையா? என்பது உங்களுக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்ப, உடனிருந்தவர்கள் கூச்சலிட்டனர்.