நாளை திடீரென கூடும் தமிழக வெற்றிக் கழகம்.. முக்கிய முடிவில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம்
அறிவிப்பு வெளியான போதே தேசிய அளவில் கவனம் ஈர்த்தது நடிகர் விஜய்யின் அரசியல் வருகை. தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரும் சட்டென மாநிலம் முழுவதும் பரவியது.
தனது படப்பிடிப்புகளில் தற்போது பிஸியாக இருக்கும் விஜய், கட்சி பணிகளையும் பொதுச்செயலாளர் ஆனந்தை வைத்து மும்முரமாக இயக்கி வருகின்றார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
#தமிழகவெற்றிக்கழகம்#TVKVijay pic.twitter.com/uLGLvsbVV4
— TVK Vijay (@tvkvijayhq) February 18, 2024
சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024, திங்கட்கிழமை) காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. நமது கழகத்தின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.