தூத்துக்குடியா..? நாகையா..? விஜய் குறிவைக்கும் தொகுதி எது..? மாஸ்டர் போடும் பிளான்
வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
விஜய் அரசியல்
தமிழக வெற்றி கழகம் அரசியல் களத்தில் கால் வைத்ததுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்றே கூறலாம். பல கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றாலும் விஜய் கட்சியால் எங்கள் ஓட்டு உடையது என்று கூறியது அவர்களுக்கு இருக்கும் சந்தேகத்தையே வெளிப்படுத்துகிறது.
ஆரவாரமின்றி அரசியல் வருகையை அறிவித்து விட்ட விஜய், தான் கமிட்டான படங்களில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றார்.
தூத்துக்குடியா...? நாகையா..?
வரும் 2026-ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து பணிகளை மேற்கொண்டு வரும் சூழலில், விஜய் தமிழகத்தில் எந்த தொகுதியை குறிவைப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, விஜய் மீனவ வாக்குகள் அதிகமுள்ள நாகை அல்லது தூத்துக்குடி பிபகுதிகளில் ஒரு தொகுதியை தான் குறிவைக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதிலும் எம்.ஜி.ஆர் வழியா..?
இந்த வகையிலும் விஜய் எம்.ஜி.ஆரை முன்னுதாரணமாக கொண்டு தான் செயல்படுகிறாரா..? என்றும் கருத்துக்களும் தொடர்ந்து பேசப்படுகின்றன. ஏனென்றால் எம்.ஜி.ருக்கு இன்றளவும் மீனவ பகுதிகளில் பெரும் ஆதரவு நீடித்து வருகின்றது.
எம்.ஜி.ஆரை தொடர்ந்து மீனவ மக்களை சற்று கவர்ந்த நடிகராக விஜய் இருக்கும் நிலையில், அதே பகுதியை தான் அவர் தேர்தலுக்கும் தேர்ந்தெடுக்கிறாரா..? என்று பேசப்படுகிறது.