இப்படிப்பட்டவர் தான் விஜய் -தீவிர ரசிகைக்கே உதவாதவர் இப்போ கட்சி ஆரம்பிச்சிட்டாரு - வீரலட்சுமி
நடிகர் விஜய்யின் அரசியல் குறித்து தமிழர் பாதுகாப்பு படை அமைப்பின் தலைவர் வீரலட்சுமி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
வீரலட்சுமி ஆவேசம்
செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வீரலட்சுமி, ஒரு வருடத்திற்கு முன்பு மோவூரில் விஜய்யின் தீவிர ரசிகையான சிறுமி 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
ஆனால், வீட்டில் இதனை கூற பயந்த சிறுமி, தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். உடலில், 60 சதவீதத்துக்கும் மேல் தீக்காயம் ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சைக்கு பணமில்லாததால், வீடியோ வாயிலாக சிறுமி விஜய்யிடம் உதவி கோரிக்கையுள்ளார்.
ஆனால், விஜய் அந்த சிறுமிக்கு எந்த உதவியும் செய்யவில்லை என குறிப்பிட்ட வீரலட்சுமி, போதிய சிகிச்சை இல்லாமல் அந்த சிறுமி இறந்தும் போனார் என்று தெரிவித்தார். தன் ரசிகைக்கே அதுவும் ஒரு சிறுமிக்கு கூட உதவிட மனமில்லாத விஜய்,
திரையுலகில் தான் சம்பாதித்த பணத்தை காப்பாற்றுவதற்காக தான் அரசியல் கட்சி ஆரம்பிச்சிருக்காரு என கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.