ஜூன் 4'இல் தேர்தல் முடிவு - ஜூன் 15 - 20'க்குள் கூட்டம் - மும்முரப்படுத்தும் விஜய்
நடிகர் விஜய் வரும் ஜூன் 15 முதல் 20-ஆம் தேதிக்குள் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம்
அறிவிப்பு வெளியான போதே தேசிய அளவில் கவனம் ஈர்த்தது நடிகர் விஜய்யின் அரசியல் வருகை. தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரும் சட்டென மாநிலம் முழுவதும் பரவியது.
பெரும் அரசியல் சக்தியாகுமா என எதிர்பார்க்கப்படும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு வகையில் பணியாற்றி வருகின்றது. ஆனால், மையப்புள்ளியாக அமைந்த விஷயமென்றால் அது கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படங்களில் 234 தொகுதிகள் தோறும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை சந்தித்து அவர் பாராட்டியது தான்.
சந்திப்பு
இந்த ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், மீண்டும் விஜய் எப்போது மாணவர்களை சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இது குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டும் கல்வி விருது விழா நடைபெறும் என்றும் அதில் பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. முன்னதாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாஸ் வழங்கும் பணியும் துவங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி ஜூன் 15 - 20ஆம் தேதிக்குள் நடைபெறும் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.