சிபிஐ விசாரணை, ஜனநாயகன் சர்ச்சை; மௌனம் கலைக்கும் விஜய் - எப்போது தெரியுமா?
தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் என்ன பேச உள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தவெக செயல்வீரர்கள் கூட்டம்
முதல் முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தமிழக வெற்றி க்கழகம் மற்ற கட்சிகளை போல் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.

சமீபத்தில் தேர்தல் பிரச்சார குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆகியவற்றை அமைத்த தவெக தலைவர் விஜய், தற்போது செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்ட உள்ளார்.
வரும் ஜனவரி 25 ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், தவெக தலைவர் விஜய் தலைமையில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் 18 ஆம் திகதி ஈரோடு பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், அதன் பின்னர் கடைசியாக கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் எந்த பொது நிகழ்விலும் கலந்து கொள்ளாத விஜய், டெல்லியில் சிபிஐ விசாரணை, தணிக்கை வாரியத்தால் ஜனநாயகன் பட வெளியாவதில் சிக்கல் போன்றவற்றிலும் மௌனமாக உள்ளார்.
பாஜக தணிக்கை வாரியம் மூலம் ஜனநாயகம் படம் வெளியாகாமல் விஜய்க்கு அழுத்தம் கொடுப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், நடைபெற உள்ள தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் என்ன பேச உள்ளார் என பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.