இன்னும் ஓரிரு நாளில்....கட்சியின் கொடி அறிமுகம்!! த.வெ.க பொதுச்செயலாளர் என்.ஆனந்த்
தமிழக வெற்றிக் கழகம் துவங்கப்பட்டு சுமார் 5 மாதம் ஆகிவிட்டது.
தமிழக வெற்றிக் கழகம்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வழக்கமாக கொள்வார்கள், விஜய்யும் அப்படி தான் வந்துள்ளார், காலப்போக்கில் அவர் மறைந்து போவார் என்ற கருத்துக்கள் விஜய் கட்சி அறிவித்த போதே எழுந்தன.
ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகியுள்ள விஜய் ஒவ்வொரு கட்டத்தில் என்ன செய்கிறார் என்ற ஒரு எதிர்பார்ப்பு பத்திரிகையாளர்களிடம் எழுந்துள்ளது. அது மக்களிடம் அதிகளவில் இருப்பதையும் காணலாம்.
அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, நேற்று(ஜூலை 18) சேலத்தில் நடைபெற்ற கட்சியின் ரத்ததான முகாமிற்கு குவிந்த தொண்டர்களின் கூட்டம். சுமார் 1000'க்கும் மேற்பட்டோர் குவிந்துவிட்டார்கள்.
கொடி
இது ஒரு புறம் இருக்கும் நிலையில், விஜய் எப்போது கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்குவார் என பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
அதாவது விஜய் விரைவில், கட்சியின் கொடி என்ன என்பதை அறிவித்து விடுவார் என்ற தகவலை என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை மாம்பாக்க ஊராட்சி மன்ற தலைவர் உடன் சேர்த்து மாற்று கட்சியை நேற்று என்.ஆனந்தின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்து கொண்ட பிறகு, பேசிய என்.ஆனந்த் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.