மக்கள் உயிர் காக்க களத்தில் இறங்கிய த.வெ.க நிர்வாகிகள் - அதிர்ந்த சேலம்!!
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழகம்
பிப்ரவரி 2-ஆம் தேதி துவங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் இப்பொது, தமிழக அரசியலில் பேசும் பொருளாக மாறிவிட்டது. யாருடன் கூட்டணி, தாக்கம் எவ்வாறாக இருக்கும் என்பதில் துவங்கி, கட்சி தலைவராக ஒரு விவகாரத்தில் விஜய் எம்மாதிரியான கருத்துக்களை தெரிவிக்கிறார் என்ற கவனம் எழுந்து கொண்டே இருக்கிறது.
அண்மையில் கூட செய்தி ஒன்று வெளிவந்தது. அதாவது தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஒரு மாநில பொதுக்கூட்டம், 4 மண்டல பொதுக்கூட்டம் என்பதில் துவங்கி, 100 சட்டமன்றத்தொகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ளதாகவும் தகவல் வெளிவந்தன.
ரத்ததானம்
இவை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் அது தொடர்பான பேச்சுக்கள் சில நாட்களாக வைரலாகி வருகிறது. இந்த சூழலில் தான், இன்று சேலத்தில் தமிழக வெற்றிக் கழக சார்பில் ரத்ததான முகம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றுள்ளது.
தலைவர் விஜய் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 1000'க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரத்ததானம் வழங்கியவர்களுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. அதே போல, நிர்வாகிகளுக்கு வெஜிடபிள் பிரியாணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.