கல்யாண வீட்ல சாப்பாடு மிச்சமாகுதா? இனி த.வெ.க நிர்வாகிகள் வாங்கிப்பாங்க! என்.ஆனந்த் அதிரடி
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் கட்சி நிர்வாகிகளால் உணவு அளிக்கப்பட்டது. நேரில் வந்து இந்நிகழ்வை துவங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து என். ஆனந்த் பேசியது வருமாறு,
தமிழகத்தில் மட்டும் 3.50 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. அதேசமயம், தமிழகத்தில் 23 இடங்களில் ‘தளபதி விலையில்லா விருந்தகம்’ வாயிலாக தினமும் காலை வேளையில் இலவச உணவு வழங்கப்படுகிறது.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, புதுச்சேரி என பல இடங்களிலும் இது நடைபெறுகிறது. இன்று ஒரு நாள் மட்டுமில்லாமல், தளபதியின் அறிவுறுத்தலின் படி, நிர்வாகிகள் வீட்டில் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, அருகில் இருக்கும் முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கும் அளிப்பார்கள்.
கல்யாண மண்டபங்களில் மீறும் உணவுகளை தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகத்தின் அம்மண்டபத்தின் மேலாளர்களிடம் பேசி, அப்படி மீறும் போது அந்த உணவை பெற்று முதியோர் இல்லங்களுக்கு அளிப்பார்கள்.
என்.ஆனந்திடம் சீமான் விஜய் தன்னுடன் கூட்டணி அமைப்பாரா? என்ற கேள்விக்கு எந்த அறிவிப்பாக இருந்தாலும், அதனை கட்சி தலைவர் தான் அறிவிப்பார் என கூறி சென்றார்.