அதை சாத்தியப்படுத்துவது மட்டுமே தீவிர அரசியலாக இருக்கும் - தொண்டர்களுக்கு விஜய் கடிதம்

Vijay Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Oct 29, 2024 03:32 PM GMT
Report

தகுதியான அங்கீகாரம் நோக்கி மக்களே நம்மை அழைத்துச் செல்வர் என விஜய் தெரிவித்துள்ளார்.

தவெக மாநாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

tvk vijay letter

மாநாட்டில் தவெக தலைவர் விஜய் தனது கட்சி கொள்கைகள், அரசியல் எதிரி கொள்கை எதிரி, கூட்டணியில் பங்கு குறித்து பேசினார். விஜய்யின் பேச்சு தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

விஜய் பேச்சு எதிரொலி; அமைச்சரவையில் பங்கு வேண்டும் - முதல்வருக்கு காங்கிரஸ் கடிதம்

விஜய் பேச்சு எதிரொலி; அமைச்சரவையில் பங்கு வேண்டும் - முதல்வருக்கு காங்கிரஸ் கடிதம்

நன்றி கடிதம்

இந்நிலையில் விஜய் தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் மாநாட்டிற்கு உழைத்த கட்சியினர் மற்றும் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

tvk vijay letter

மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "நம்முடைய அரசியல் பயணத்தை, நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள். இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம். மற்றவற்றை மறந்தும்கூட மனதில் ஏற்றிவிடாமல் கடந்து செல்லப் பழகிக் கொள்வோம்.

தீவிர அரசியல்

அனைத்து மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நோக்கிய உழைப்பு மட்டுமே இனி நம் அரசியல். அதைச் சாத்தியப்படுத்துதல் மட்டுமே நம் தீவிர அரசியல் செய்தலாக இருக்கும். நம்மைத் தாயுள்ளத்தோடு வரவேற்கும் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக, இன்னும் அதி தீவிரமாக, தீர்க்கமாக, தீர்மானமாக உழைப்போம். 

தங்கள் மண்ணைச் சேர்ந்த மகன்களான, மகள்களான நம்மைத் தக்க இடம் நோக்கி, தகுதியான அங்கீகாரம் நோக்கி மக்களே அழைத்துச் செல்வர். ஆகவே, அவர்களின் மனதில் நிறையும் அளவிற்கு, அதிக நம்பிக்கையுடனும் நன்றியுடனும் ரெட்டைப் போர்யானைகளின் பலத்துடன் உழைப்போம். எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலையே கையிலெடுப்போம். 2026 ல் நம் இலக்கை அடைவோம்" என தெரிவித்துள்ளார்.