விஜய் பேச்சு எதிரொலி; அமைச்சரவையில் பங்கு வேண்டும் - முதல்வருக்கு காங்கிரஸ் கடிதம்

Vijay Indian National Congress M K Stalin Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Oct 28, 2024 07:30 PM GMT
Report

அமைச்சரவையில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தவெக மாநாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நேற்று நடைபெற்றது. 

தவெக தலைவர் விஜய்

இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், மதவாத அரசியல் கொள்கை எதிரி, திராவிட மாடல் அரசியல் எதிரி என பேசியதோடு, கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என பேசியிருந்தார். 

விஜய் கட்சியின் அரசியல் வியூக வகுப்பாளர் - யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?

விஜய் கட்சியின் அரசியல் வியூக வகுப்பாளர் - யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?

ஆட்சியில் பங்கு

விஜயின் இந்த பேச்சு தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விஜய் முதலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரட்டும். அதன் பிறகு ஆட்சியில் பங்கு கொடுப்பது பற்றி பேசலாம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். 

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் சரவணன், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்கு அளிக்க வேண்டும் என விஜய்யின் பேச்சை சுட்டி கட்டி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் கடிதம்

இந்த கடிதத்தில், ”தமிழக முதல்வரும் இந்தியா கூட்டணி கட்சி தமிழக தலைவருமான மண்புமிகு முக ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள், நேற்று நடைபெற்ற அவர்களது கட்சி மாநாட்டில் 2026-ல் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தங்கள் கட்சி கூட்டணி ஆட்சிக்கு தயார் என பேசி உள்ளார்.

ஆகவே தாங்கள் தற்பொழுதே நமது கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும். தங்கள் கட்சி தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள். எனவே தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது. 

congress letter to mk stalin

இதை தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவே தமிழக மக்களின் எண்ணத்தை தாங்கள் நிறைவேற்றி தமிழகத்திற்கு தாங்கள் முன்உதாரணமாக திகழ வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

விஜய் கருத்துக்கு ஆதரவு

ஏற்கனவே காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர், விஜய் பேசியதை குறிப்பிட்டு “ஜாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். 

மேலும் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் விஜய்யின் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு என்ற கருத்தை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.