இடம் - தேதி உறுதி!! தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எங்கு - எப்போது நடைபெறுகிறது தெரியுமா?
கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் துவங்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம்
தனது குறிக்கோளை தீர்கமாகவே கொண்டுள்ளார் விஜய். தங்கள் கட்சியின் நோக்கம் சட்டமன்ற தேர்தலே என்று தெளிவாக கூறி, மக்களவை தேர்தல் பணிகளில் இருந்து கட்சி ஒதுங்கியே நின்றது.
2 படங்களுடன் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ள விஜய், பட வேலைகளில் மும்முரம் காட்டி வருகிறார். அதே நேரத்தில் கட்சியின் பணிகளை கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மேற்கொண்டு வருகிறார்.
திருச்சியிலா?
முதல் மாநாடு குறித்து பல்வேறு கருத்துக்களை வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால், இன்னும் உறுதியாகவில்லை. தற்போது அப்படி தான் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.
அதாவது திருச்சி பொன்மலை ஜி-கார்னர் திடலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என்று கூறப்படுகிறது. செப்டம்பர் 25ஆம் தேதி இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், தகவல் வெளிவந்துள்ளது.
இது குறித்து அனுமதி கோரி கோட்ட மேலாளிடம் அக்கட்சி நிர்வாகிகள் கடிதம் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்திகள் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையிலும், செய்திகள் வலுவாக வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.