மக்கள் வெகுகாலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் - விஜய் ஆவேசம்

Vijay Anna University Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Dec 30, 2024 08:30 PM GMT
Report

 ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என விஜய் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

anna university

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலும், பாதிக்கப்பட்ட மாணவியின் தகவல்களுடன் FIR வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ஆளுநருடன் விஜய் பேசியது என்ன? சந்திப்பின் பின்னணியில் பாஜகவா?

ஆளுநருடன் விஜய் பேசியது என்ன? சந்திப்பின் பின்னணியில் பாஜகவா?

தவெகவினர் கைது

இந்த விவகாரத்தில் ஆளும் திமுக அரசை கண்டித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் திமுக அரசிற்கு கண்டனத்தை தெரிவித்திருந்த தவெக தலைவர் விஜய், இந்த விவகாரம் தொடர்பாக இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தார்.

முன்னதாக தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்து தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி விஜய் வெளியிட்டிருந்தார். இந்த கடிதத்தின் நகலை தவெக தொண்டர்கள், தமிழகம் முழுவதும் பொது மக்களுக்கு விநியோகித்தார்கள்.

tvk bussy anand arrest

சென்னையில் இதே போல் விநியோகித்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறையினர், தவெக பெண் நிர்வாகிகளை கைது செய்து திநகரில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். அவர்களை சந்திக்க சென்ற தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்தும் கைது செய்யப்பட்டு பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள்.

விஜய் கண்டனம்

இந்த கைதுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

vijay letter

இந்நிலையில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில், தமிழகத்துத் தங்கைகளுக்கு இன்று நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது.

ஜனநாயக விரோத நடவடிக்கை

அதில், "எல்லாச் சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன். இக்கடிதத்தின் நகல்களைத் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமும் பெண்களிடமும் த.வெ.க. மகளிரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழங்கியுள்ளனர்.

சென்னையில் பொதுமக்களிடம் இந்த நகல்களை எம் கட்சித் தோழர்கள் வழங்கவிடாமல் தடுத்த காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து, பின்னர் விடுவித்துள்ளனர். ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றதற்காக அவர்களைக் கைது செய்தது கண்டனத்துக்கு உரியது. 

கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா? இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்." என தெரிவித்துள்ளார்.