ஆளுநருடன் விஜய் பேசியது என்ன? சந்திப்பின் பின்னணியில் பாஜகவா?

Vijay R. N. Ravi K. Annamalai Anna University Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Dec 30, 2024 12:50 PM GMT
Report

தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ஆம் தேதி கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

anna university girl

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் தகவல்களுடன் FIR வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விஜய் ஆளுநர் சந்திப்பு

இந்த சம்பவம் தொடர்பாக அரசை கண்டித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று பிற்பகல் 1 மணியளவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தார்.  

vijay meet rn ravi

இந்த மனு குறித்து விளக்கமளித்துள்ள தவெக, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.  

tvk vijay letter to rn ravi

இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர் அவர்கள், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார்" என தெரிவித்துள்ளது.

அண்ணாமலை ஆதரவு

இந்த சந்திப்பின்போது, ஆளுநருக்கு திருக்குறள் புத்தகத்தை நினைவுப் பரிசாக விஜய் வழங்கியதாகவும் பதிலுக்கு, பாரதியார் கவிதைகள் தொகுப்பை நினைவுப் பரிசாக ஆளுநர் வழங்கியதாகவும் கூறப்படுகிறது. 

tvk vijay meet rn ravi

விஜய் ஆளுநரை சந்தித்து மனு அளித்ததை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். "திமுக அரசின் விசாரணையில் நம்பிக்கையின்மை குறித்தும், பாஜக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. 

இன்று தவெக தலைவர் விஜய்யும் திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, ஆளுநரை சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம். வழக்கை திசைதிருப்ப தொடர்ந்து முயற்சித்து வரும் திமுக அரசைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்துக் கட்சியினரும் முன்வர வேண்டும்" என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பின்னணியில் பாஜக

அதே நேரத்தில் விஜய்யின் ஆளுநருடனான சந்திப்பை பாஜக விஜய்யை வைத்து செய்யும் அரசியல் என விசிக துணைபொதுச்செயலாளர் வன்னி அரசு விமர்சித்துள்ளார். "இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் "ஆளுனரை சந்தித்து முறையிடுவதை சாட்டை புகழ் அண்ணாமலை மற்றும் பாஜக ஆதரவாளர்களை வைத்து தான் தில்லி பாஜக அரசியல் செய்வது வழக்கம். 

இப்போது தவெக தலைவர் நடிகர் திரு. விஜய் அவர்களை வைத்து அரசியல் செய்கிறது. ஆளுனர் ரவி அவர்களை திரு.விஜய் 15 நிமிடம் சந்தித்தார். ஊடகவியலாளர்களை கண்டு கையசைத்தார். ஆனால், ஊடகத்தினருக்கு பேட்டி கொடுக்காமலே சென்றுவிட்டார். இதற்கு பெயர் தான் Elite அரசியல்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சி கொள்கையில், "எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் அரசியல் சாசன சட்டத்திற்குப் புறம்பாக நீடிப்பதால், ஆளுநர் பதவி என்பது தேவையா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. மாநில அரசுகளின் சுயமரியாதையைச் சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் பதவியை எதிர்த்து விட்டு அவரிடமே மனு அளிப்பது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.