அரசியலில் தாக்குப்பிடிக்க விஜய் மக்களிடம் இதை செய்ய வேண்டும் - திருமாவளவன் அறிவுரை!

Vijay Thol. Thirumavalavan Tamil nadu
By Swetha Aug 27, 2024 10:09 AM GMT
Report

அரசியலில் விஜய் தாக்குப்பிடித்து மக்களிடம் நன்மதிப்பை பெறவேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் 

திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், சினிமாவிலேயே இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சியை கைப்பற்றி விட முடியும் என்கிற எண்ணம் நீண்ட காலமாக தமிழக அரசியலில் இருந்து வருகிற ஒன்றுதான்.

அரசியலில் தாக்குப்பிடிக்க விஜய் மக்களிடம் இதை செய்ய வேண்டும் - திருமாவளவன் அறிவுரை! | Vijay Should Gain Respect From People Says Thiruma

முயற்சியில் ஆந்திராவிலும் கூட என்.டி.ஆர்.யை பின்பற்றி பலர் வந்து பார்த்தார்கள். தமிழ்நாட்டிலே அப்படி பலர் முயற்சித்தும் அதில் வெற்றி பெற முடியவில்லை என்ற ஒரு விமர்சனம் இருக்கிறது. எம்.ஜி.ஆர். சினிமாவில் இருந்த காலத்திலேயே அரசியலில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்தார்.

அதனால் அவர் அரசியலில் இருந்து அதாவது ஒரு ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரால் தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட போது நீண்ட நெடிய அனுபவம் உள்ள பல தலைவர்கள் அவரோடு வெளியேறினார்கள். அவருடைய வெற்றிக்கு அது ஒரு காரணம்.

தவெக தலைவர் விஜய் பேசியதில் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை - திருமாவளவன்!

தவெக தலைவர் விஜய் பேசியதில் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை - திருமாவளவன்!

விஜய் மக்களிடம்..

வெறும் சினிமா ரசிகர்களை, ரசிகர் மன்ற தலைவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு வர அரசியல் செய்யவில்லை. அவர் கட்சியை தொடங்குகிற போது தி.மு.க.விலிருந்து அவரோடு சேர்ந்து விலகிய பல அரசியல் தலைவர்கள் கட்சியை நிர்வாகத்தில் அனுபவம் உள்ளவர்கள் அவரோடு இருந்தார்கள்.

அரசியலில் தாக்குப்பிடிக்க விஜய் மக்களிடம் இதை செய்ய வேண்டும் - திருமாவளவன் அறிவுரை! | Vijay Should Gain Respect From People Says Thiruma

அதனால் வெற்றி பெற முடிந்தது. அதன் பிறகு வந்த தலைவர்கள் அதாவது சினிமா மூலம் வந்த தலைவர்கள். அதில் பிரகாசிக்க முடியாமல் போனதற்கு அது ஒரு காரணம். தற்போது மக்களிடையே இருந்துள்ள சமூக ஊடகங்களின் வாயிலாக வளர்ந்துள்ள அரசியல் விழிப்புணர்வு இன்னொரு காரணம்.

விஜய் அரசியல் எவ்வளவு கடினமானது, போராட்டங்கள் நிறைந்த ஒரு களம், என்பதை இனி நடைமுறையில் அவர் சந்திக்க நிறைய வாய்ப்புகள் உருவாகும். தாக்குப்பிடித்து அவர் நிற்க வேண்டும். மக்களுடைய நன்மதிப்பை பெற வேண்டும்.

இது எல்லாம் நிகழ்ந்த பிறகு தான் இது குறித்து நாம் ஒரு கருத்தை சொல்லப்படுகிறது. முன்கூட்டியே நாம் ஒரு யூகத்தில் கணக்கு போட்டு சொல்ல முடியாது. அரசியலில் விஜய் வெற்றி பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.