கஷ்டப்பட்டு வந்திருக்கேன்..தினமும் 500 ரூபாய்தான் தருவார் -சூர்யா விஜய் சேதுபதி வருத்தம்!

Vijay Sethupathi Tamil Cinema Actors Social Media
By Swetha Oct 22, 2024 01:30 PM GMT
Report

ஒரு நாளைக்கு 500 ரூபாய் மட்டுமே பாக்கெட் மணி வாங்குவதாக சூர்யா விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

சூர்யா

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "நானும் ரவுடி தான்" படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாக நடித்திருந்தார் மகன் சூர்யா. அப்போதிலிருந்தே அவர் நாயகனாக அறிமுகவார் என்ற கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டது. அது தற்போது நிறைவேறியுள்ளது.

கஷ்டப்பட்டு வந்திருக்கேன்..தினமும் 500 ரூபாய்தான் தருவார் -சூர்யா விஜய் சேதுபதி வருத்தம்! | Vijay Sethupathis Son Surya Gets Got Trolled

அனல் அரசு இயக்கும் படத்தில் சூர்யா விஐய் சேதுபதி நாயகனாக அறிமுகமாகிறார். அந்த படம் நவம்பர் 14ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா படமும் அதே நாளில் தான் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டுகொண்டிருக்கும் சூர்யா விஜய் சேதுபதி அண்மையில் சொன்ன ஒரு கருத்து ட்ரோல்களுக்கு இரையாகியுள்ளது.

19 வயசுலயே இப்படி? டீசர் சுத்தமா புடிக்கல - விஜய் சேதுபதி மகனை வறுத்தெடுத்த பிரபலம்

19 வயசுலயே இப்படி? டீசர் சுத்தமா புடிக்கல - விஜய் சேதுபதி மகனை வறுத்தெடுத்த பிரபலம்

500 ரூபாய்தான்

அவர் கூறியதாவது, சின்ன வயதில் இருந்து கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். செலவுக்கு தினமும் 500 ரூபாய் தான் கொடுப்பார் என் அப்பா. அதனால் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என வந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

கஷ்டப்பட்டு வந்திருக்கேன்..தினமும் 500 ரூபாய்தான் தருவார் -சூர்யா விஜய் சேதுபதி வருத்தம்! | Vijay Sethupathis Son Surya Gets Got Trolled

சூர்யா கூறியதை கேட்ட சமூக வலைதளவாசிகள், இந்த சின்ன வயதில் உங்களுக்கு இப்படியொரு கஷ்டம் என்பதை நினைக்கும்போதே மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு தம்பி. தினமும் 500 ரூபாய் பாக்கெட் மணியை வைத்து ஸ்டார்பக்ஸில் ஒரு காஃபி கூட குடிக்க முடியாது.

என்ன பேசுகிறோம் என்பதை புரிந்து பேசுங்கள் சூர்யா. பலபேரின் தினசரி சம்பளமே 500 ரூபாய் தான். மாதம் ரூ. 15 ஆயிரம் பாக்கெட் மணியாக பெறுகிறீர்கள். அது தான் பலரிம் மாத சம்பளம். எங்களுக்கு எல்லாம் பாக்கெட் மணியாக தினமும் 500 ரூபாய் கிடைத்தது இல்லை.

இதில் இருந்தே கஷ்டம் என்பது என்னவென்று தெரியாமல் வளர்ந்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. உங்கப்பா தான் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். நீங்கள் எளிதில் வந்துவிட்டீர்கள். அதனால் இனியும் இது போன்று பேசி அப்பாவின் பெயரை கெடுக்க வேண்டாம் என்றெல்லாம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.