19 வயசுலயே இப்படி? டீசர் சுத்தமா புடிக்கல - விஜய் சேதுபதி மகனை வறுத்தெடுத்த பிரபலம்
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பீனிக்ஸ் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.
சூர்யா விஜய்சேதுபதி
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "நானும் ரவுடி தான்" படத்தில் சிறு வயது விஜய் சேதுபதியாகி நடித்திருந்தார் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி. அப்போதிலிருந்தே அவர் நாயகனாக அறிமுகவார் என்ற கருத்துக்கள் வலுப்பெற்றது.

அது தற்போது நிறைவேறியுள்ளது. அனல் அரசு இயக்கும் படத்தில் சூர்யா விஐய் சேதுபதி நாயகனாக அறிமுகமாகிறார். படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. அது தொடர்பாக பல விதமான கருத்துக்கள் சமூகவலைத்தளத்தில் எழுதப்பட்டன.
பிடிக்கல
முன்னதாக பேசும் போது, நான் வேறு அப்பா வேறு என்றெல்லாம் பேசினார். அவரை குறித்து பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் பேசும் போது, எப்படியாக இருந்தாலும் அவருக்கு கிடைத்த வாய்ப்புக்கு காரணமே அப்பா விஜய் சேதுபதி தான் அதனை யாராலும் மறுக்கமுடியாது.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றால் தான் ஹீரோவாக தொடர முடியும். பீனிக்ஸ் படத்தின் டீசர் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று பிஸ்மி ஓப்பனாக கூறியிருக்கிறார்.

சூர்யாவின் மேனரிசம் எதுவுமே அந்த டீசரில் புதிதாக தெரியவில்லை. டீசர் ரசிகர்களையும் பெரிதாக கவரவில்லை, படம் வரட்டும் எப்படி இருக்கிறது பார்ப்போம் என்று பிஸ்மி விமர்சித்து பேசியிருக்கிறார்.
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan