செட் ஆகல.. பாடம் கத்துகிட்டேன்; ராம்சரணுடன் நடிக்க மறுத்தது ஏன்? விஜய் சேதுபதி விளக்கம்!
ராம்சரணுடன் நடிக்க மறுத்தது குறித்து விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார்.
விஜய் சேதுபதி
வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ள விடுதலை 2 படம் வருகின்ற 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக விடுதலை ; பார்ட் - 1 வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்
இரண்டாவது பாகமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்களுக்காக படக்குழுவினர் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஐதராபாத்திலும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். அப்போது அவரிடன் அடுத்தடுத்த கேள்விகள் கேட்கப்பட்டன.. அதில் அவர் ஏன் ராம்சரணுடன் இணையவில்லை என்று கேட்கப்பட்டது.
மறுத்தது ஏன்?
அதற்கு பதிலளித்த அவர், தனக்கு செட் ஆகவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் சில பாடங்களை தான் கற்றுக் கொண்டுள்ளதாகவும் படத்தின் கதைக்களம் சிறப்பாக அமைந்தால் தன்னுடைய கேரக்டர் சிறப்பாக அமையாத நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு அந்தப் படத்தில் நடிக்க நேரம் ஒத்துழைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது, ராம்சரண் -புஜ்ஜி பாபு கூட்டணியில் உருவாகிவரும் அவரது ஆர்சி16 படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக இணையவுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
எனினும் அடுத்தடுத்து விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஷாருக்கான் ஆகியோருடன் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி, தொடர்ந்து வில்லனாக நடிக்கப் போவதில்லை என்று தீர்மானித்ததாக சொல்லப்படுகிறது.