Thursday, Jul 3, 2025

பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கோங்க சார்..மேடையில் அவேசமான விஜய் சேதுபதி!

Vijay Sethupathi Tamil Cinema
By Swetha 9 months ago
Report

விமல் நடிப்பில் உருவாகியுள்ள சார் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விஜய் சேதுபதி

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சார்’. இதில், கதாநாயகியாக சாயா தேவி நடித்திருக்க சிராஜ் , சரவணன், ரமா, ஜெயபாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கோங்க சார்..மேடையில் அவேசமான விஜய் சேதுபதி! | Vijay Sethupathi And Saravanan On Sir Audio Launch

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தை வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி மூலம் வெளியிடுகிறார். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் வெற்றிமாறன், விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

அப்போது நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, “கூத்துப் பட்டறையில் இருக்கும் போது விமலின் நடிப்புக்கு நான் பெரிய ரசிகன். அவ்ளோ பிரமாதமாக நடிப்பார். கூத்துப் பட்டறையில் எல்லாரும் சிறந்த நடிகர்கள் தான். ஒரு சில நடிகர்களை எனக்கு ரொம்ப புடிக்கும்.

விஜய் சேதுபதியை உதைத்தால் பரிசு..அர்ஜுன் சம்பத் சர்ச்சை பேச்சு - நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்!

விஜய் சேதுபதியை உதைத்தால் பரிசு..அர்ஜுன் சம்பத் சர்ச்சை பேச்சு - நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்!

மேடையில்.. 

பாபு, சாந்தகுமார், குரு சோமசுந்தரம், முருகதாஸ், விதார்த் என அனைவரும் நடிக்கும் போது அவ்ளோ அழகாக இருக்கும். அதனால் சார் படம் விமலுக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக இருக்கும் என நம்புகிறேன். என்று தெரிவித்தார்.

பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கோங்க சார்..மேடையில் அவேசமான விஜய் சேதுபதி! | Vijay Sethupathi And Saravanan On Sir Audio Launch

தொடர்ந்து, பிக் பாஸ் புகழ் நடிகர் சரவணன் சார் படத்தில் ஒரு ரோலில் நடித்து இருக்கிறார். அவரை பற்றி விஜய் சேதுபதி பெருமையாக மேடையில் பேசினார். அப்போது அருகில் அமர்ந்து இருந்த சரவணன் விஜய் சேதுபதி காலை தொட்டு கும்பிட்டார்.

அதனால் கோபமான விஜய் சேதுபதி 'பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கோங்க' என சிரித்து கொண்டே சிரியஸாக பேசினார். அதன் பின் மைக்கில் பேசிய சரவணன். நான் இன்னொரு படத்தில் விஜய் சேதுபதிக்கு அப்பாவாக நடிக்கிறேன், அதனால் தான் அப்படி சொல்கிறார் என விளக்கம் கொடுத்து சமாளித்தார்.