விஜய் சேதுபதியை உதைத்தால் பரிசு..அர்ஜுன் சம்பத் சர்ச்சை பேச்சு - நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்!

Vijay Sethupathi Tamil nadu Coimbatore
By Swetha Aug 09, 2024 03:55 AM GMT
Report

அர்ஜுன் சம்பதின் விஜய் சேதுபதி பற்றிய சர்ச்சை பேச்சுக்கு நீதிமன்றம் அபராதம் வித்தித்துள்ளது.

விஜய் சேதுபதி

கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் நடிகர் விஜய் சேதுபதி தனது உதவியாளருடன் பெங்களூர் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது பயணி ஒருவர் விஜய் சேதுபதி உதவியாளரை தாக்கியது பெரும் பரபரப்பை எற்படுத்தியது.

விஜய் சேதுபதியை உதைத்தால் பரிசு..அர்ஜுன் சம்பத் சர்ச்சை பேச்சு - நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்! | Arjun Sampath Fined For Posting Controversial Vs

இது தொடர்பான வீடியோ காட்சிகள் பரவி பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பும் மாறி மாறி போலீசாரிடம் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து இருதரப்பும் சமாதானம் செய்து கொண்டதாகவும் புகாரை வாபஸ் பெற்றதாகவும் தகவல் வெளியானது.

இதற்கிடையே திடீரென விஜய் சேதுபதியின் உதவியாளரை உதைத்த அந்த நபர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் விஜய் சேதுபதி இந்தியாவையும் முத்துராமலிங்க தேவரையும் விமர்சித்தார் என்றும் இதன் காரணமாகவே உதைத்தேன் என்று கூறிய புதிய சர்ச்சையை கிளப்பினார்.

கலவரம் செய்தால் தான் பாஜக வளரும்..சொன்ன நிர்வாகி - ஆக்ஷன் எடுத்த அர்ஜுன் சம்பத்!!

கலவரம் செய்தால் தான் பாஜக வளரும்..சொன்ன நிர்வாகி - ஆக்ஷன் எடுத்த அர்ஜுன் சம்பத்!!

அர்ஜுன் சம்பத்

அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அர்ஜூன் சம்பத் சர்ச்சை கருத்தை பதிவிட்டார்.

விஜய் சேதுபதியை உதைத்தால் பரிசு..அர்ஜுன் சம்பத் சர்ச்சை பேச்சு - நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்! | Arjun Sampath Fined For Posting Controversial Vs

இந்த விவகாரம் பெரும் சர்சையாக வெடித்த நிலையில், கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், கோவை குற்றவியல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி அர்ஜுன் சம்பத் தனது குற்றத்தை ஒப்பு கொண்டதால் அவருக்கு ரூ. 4000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.