ஜாதி - மதத்திற்காக கூப்பிட்டால் - சிந்தித்து வாக்களியுங்கள் - வைரலாகும் விஜய் சேதுபதி வீடியோ

Vijay Sethupathi Election
By Karthick Mar 19, 2024 05:54 AM GMT
Report

வாக்களிப்பதை குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
 

நெருங்கும் தேர்தல்

 நாட்டில் மக்களவை தேர்தல் குறித்தான விவாதங்களே அதிகரித்துள்ளது. மக்கள் கட்சிகளை உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட துவங்கி விட்டனர்.

vijay-sethupathi-on-voting-to-caste-religion-vote

தேர்தல் விதிமுறைகளும் நாட்டில் அமலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த 3 மாதங்களுக்கு தேர்தல் குறித்தான பேச்சுக்கள் தான் நாட்டின் முக்கிய தலைப்பு செய்தியாக இருக்கும். பல வித பரப்புரைகளை மேற்கொள்ளப்படும் நிலையில், சமூகவலைத்தளமும் இதில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

தனியா வாங்க.. முத்தம் கொடுப்பதற்காக அந்த பிரபலத்தை அழைத்த விஜய் சேதுபதி - ஷாக்!

தனியா வாங்க.. முத்தம் கொடுப்பதற்காக அந்த பிரபலத்தை அழைத்த விஜய் சேதுபதி - ஷாக்!

தற்போது சமூகவலைத்தளத்தில், நடிகர் விஜய் சேதுபதி பேசிய அரசியல் கருத்து வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில்,

ஜாதிக்கு மதத்திற்கு.

அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே பார்த்து ஓட்டு போடுங்க, தயவு செய்து சிந்தித்து ஓட்டு போடுங்க. நாம் ஓட்டு போடுவது ரொம்ப முக்கியம். நம்ம ஊரில் ஒரு பிரச்சனை, காலேஜ் - ஸ்கூல்'ல ஒரு பிரச்சனை, நண்பர்களுக்கு பிரச்சனை, இல்ல நம்ம ஸ்டேட்'டுக்கு ஒரு பிரச்சனை என்று கூப்பிடுபவர்களுடன் சேருங்கள்.

vijay-sethupathi-on-voting-to-caste-religion-vote

ஆனால், நம்ம ஜாதிக்கு மதத்திற்கு ஒரு பிரச்சனை என்பவர்களுடன் தயவு செய்து சேராதீர்கள். அப்படி சொல்லுபவர்கள் அனைவரும் நம்மை தூண்டிவிட்டு....அவங்க வீட்டில் பாதுகாப்பாக இருப்பாங்க, நம்ம தான் மாட்டிக்கொள்வோம் தயவு செய்து புரிந்து கொண்டு வாக்களிங்கள்.

தேர்தல் நெருங்கும் சூழலில், பிரபல நடிகர்களின் அரசியல் கருத்துக்களை பலரும் பகிர்ந்து வரும் சூழலில், விஜய் சேதுபதியின் கருத்துக்கள் சமூகவலைத்தளத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.