தனியா வாங்க.. முத்தம் கொடுப்பதற்காக அந்த பிரபலத்தை அழைத்த விஜய் சேதுபதி - ஷாக்!
நடிகர் விஜய் சேதுபதி பிரபல நடிகரை முத்தம் கொடுப்பதற்கு அழைத்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, ஹீரோயிசம் காட்டாமல் தனது இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோ, வில்லன், ஹீரோவின் நண்பன், குணச்சித்திரம் என பல வேடங்களிலும் நடித்து திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
ஹீரோ என்று பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் சாதாரணமாக பேசி இயல்பாக நடந்துக்கொள்வார், அதனால் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சமீப காலமாக இவரது நடிப்பு தனி இடத்தை பிடித்து வருகிறது.
மேடையில் நடிகர்
இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த இறைவன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விஜய் சேதுபதி பேசினார். அதில் அவர், "நான் பார்த்த முதல் ஹீரோ ஜெயம் ரவிதான். அவர் அருமையான மனிதர். போகன் படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அந்த சமயத்தில் வேறொரு படத்தில் பிஸியாக இருந்ததால் என்னால் நடிக்க முடியாமல் போனது. இனிமேல் வாய்ப்புகள் வந்தால் அவருடன் சேர்ந்து நடிப்பேன். நீங்க தனியா வாங்க உங்களுக்கு முத்தம் கொடுக்கிறேன்" என்று நகைச்சுவையாக கூறினார். இது தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
