அய்யோ.. அவர் கண்ணை பார்த்தாலே போதும், அப்புடி இருக்கும் - பிரபல நடிகர் பற்றி பேசிய அபிராமி!
நிகழ்ச்சி ஒன்றில் நடிகை அபிராமி நடிகர் ஒருவர் குறித்து பேசியுள்ளார்.
அபிராமி
தமிழ் சினிமாவில் விருமாண்டி படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை அபிராமி. இவர் மலையாளத்தில் வெளியான கதாபுருஷன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதன்பிறகு தமிழில், வானவில்,தோஸ்த், சமுத்திரம், சார்ளி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இதன்பின்னர் தான் கமல்ஹாசனுடன் ஜோடியாக நடித்த விருமாண்டி படம் இவருக்கு பேர் வாங்கி கொடுத்தது. தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு ஷோவில் ஜட்ஜாக உள்ளார்.
நடிகை பேட்டி
இந்நிலையில், இவர் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் படம் மகராஜா. இது விஜய் சேதுபதியின் 50வது படம், இதன் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நடிகை அபிராமி பேசினார். அதில், "நான் விஜய்சேதுபதியின் தீவிரமான ரசிகை, திரையுலகில் தீவிரமான கண்கள் என்றால் முதலில் கமல்ஹாசன் தான் சொல்லுவேன்.

அடுத்தது விஜய் சேதுபதியின் கண்கள், அந்த கண்களை பார்த்தாலே, அய்யோ.. அப்புடியே மெய்மறந்து உட்காந்திருப்போம். அத்துடன் உங்ககிட்ட நிறைய டேலன்ட் இருக்கு" என்று கூறியுள்ளார்.
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
தொடர் பதவி விலகல்கள்...! ஊழலற்ற ஆட்சி முழக்கத்திற்கு விழுந்த முதல் அடி - சிதைந்த அரசாங்கத்தின் பிம்பம் IBC Tamil