ஷூட்டிங் ஸ்பாட்டில் தினமும் அழுவேன்.. அந்த காரணத்தால் தான் - இமோஷனல் ஆன விருமாண்டி நடிகை!
விருமாண்டி பட நடிகை தனது படத்தில் நடந்த நிகழ்வு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் விருமாண்டி படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை அபிராமி. இவர் மலையாளத்தில் வெளியான கதாபுருஷன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதன்பிறகு தமிழில், வானவில்,தோஸ்த், சமுத்திரம், சார்ளி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இதன்பின்னர் தான் கமல்ஹாசனுடன் ஜோடியாக நடித்த விருமாண்டி படம் இவருக்கு பேர் வாங்கி கொடுத்தது. தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு ஷோவில் ஜட்ஜாக உள்ளார்.
பேட்டி
இந்நிலையில், இவர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் இவர் தனது சிறு வயது நண்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறியுள்ளார். பின்னர் இவருக்கு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்று ஆசை அதனால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து கல்கி என்று பெயர் வைத்ததாக கூறியுள்ளார்.
கல்கி என்பது ஒரு அவதாரம், அதை நான் பெண்ணாக பார்க்கிறேன். பெண்ணால் தான் அனைத்தையும் மாற்ற முடியும் என்றார். மேலும், படம் குறித்து, "ஆர் யூ ஓகே பேபி படத்தின் கதையை லட்சுமி மேடம் என்னிடம் சொல்லும் போது ரொம்பவும் உணர்ச்சி பூர்வமாக இருந்ததால், நடிக்க ஒத்துக்கொண்டேன்.
ஒரு குழந்தையை தத்து எடுப்பதால் அந்த குடும்பத்தினரின் மனவலியை சொல்லும் கதை என்பதால், அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது தினமும் அழுதுக் கொண்டே இருப்பேன்" என்று கூறியுள்ளார்.