முதல் படத்திலேயே அசிங்கப்படுத்திய டான்ஸ் மாஸ்டர் - கடுப்பான பிரபல முன்னணி ஹீரோயின்!
பிரபல முன்னணி ஹீரோயின் தனது முதல் படத்தில் நடந்த அனுபவம் குறித்து பேட்டியில் கூறியுள்ளார்.
முன்னணி நடிகை
பிரபல முன்னணி நடிகைகளில் மிக முக்கியமான நடிகை பாலாம்பிகா. இவர் முதன்முதலாக பாலம் என்கிற திரைப்படத்தில் முரளிக்கு தங்கையாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு சத்யராஜ் நடித்த நடிகன் திரைப்படத்தில் குஷ்புவிற்கு தங்கையாக பாலாம்பிகா நடித்திருப்பார்.
அதன்பின்னர் அவர் தம்பிக்கு ஒரு பாட்டு என்ற திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகியாக நடித்தார்.
நடிகை பேட்டி
இந்நிலையில், இவர் தனது முதல் படத்தில் நடந்த அனுபவம் குறித்து தற்போது பேசியுள்ளார். அதில், படப்பிடிப்பு நடந்தப்போது அந்த படத்தில் ஜான்பாபு என்கிற டான்ஸ் மாஸ்டர் அவருக்கு நடனமாட கற்றுக் கொடுத்தார்.
ஆனால் இவருக்கு அந்த படத்தில் நடிக்கும் போது நடனம் ஆடவே தெரியாது, இதனால் அந்த டான்ஸ் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திலேயே வைத்து அவரை திட்டியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் மக்கள் மற்றும் பட குழுவினர் மத்தியில் அவமானமானதால் இவர் படப்பிடிப்பை விட்டு உடனே கிளம்பி விட்டார்.
பின்னர் அந்த படக்குழுவினர் அவரை சமாதானம் செய்து நடிக்க வைத்தார்கள் என்று கூறியுள்ளார்.