குடும்பம் மன உளைச்சலில்.. அவர் அனுபவிக்கட்டும் - பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்!
தன்மீது வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டு
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவர் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் வெளியானது.
இந்நிலையில் ரம்யா மோகன் என்பவர் விஜய் சேதுபதி மீது சில குற்றச்சாட்டுகளை முன் வைத்து தனது X தளத்தில் பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார். அதில், "கோலிவுட்டில் நடக்கும் Casting Couch (நடிகர்களை தேர்ந்தெடுக்கும் படலம்) கலாச்சாரம் ஒன்றும் நகைச்சுவை இல்லை.
எனக்கு தெரிந்த ஊடகத்தில் இருக்கும் ஒரு பெண், அவருக்கு தெரியாத இந்த உலகில் சிக்கிக்கொண்டார். இப்போது அவர் மறுவாழ்வு மையத்தில் (Rehab) இருக்கிறார். போதை பொருள், ஏமாற்று வேலை, நிதி இழப்பு என அனைத்தையும் அவர் சந்தித்து இருக்கிறார்.
விஜய் சேதுபதி விளக்கம்
நடிகர் விஜய் சேதுபதி ‘கேரவனில் உதவி செய்வதற்காக” 2 லட்சம் வரை கொடுத்து, அந்த கேரவனை ஓட்டுபவர்களுகு ரூ.50 ஆயிரம் வரை கொடுத்திருக்கிறார். அவர், சமூக வலைதளத்தில்தான் பெரிய மகான்போல் தன்னை காட்டிக்கொள்கிறார். அந்த பெண்ணை விஜய் சேதுபதி பல வருடமாக ஏமாற்றியிருக்கிறார்.
இது ஒரு சம்பவம், ஆனால் மீடியாவால் புகழப்படுபவர்கள் நிறைய பேர் இயல்பு வாழ்க்கையில் இப்படி இருக்கின்றனர்" என்று குற்றம்சாட்டினார். தற்போது இதற்கு விளக்கமளித்துள்ள விஜய் சேதுபதி “என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்தவர்களுக்குக் கூட அது பொய் என்று தெரியும்.
இந்த அசிங்கமான குற்றச்சாட்டுகள் என்னை பாதிக்காது. என் குடும்பத்தினரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. அந்த பெண்ணைப் பற்றி அனைவரும் பேசவேண்டும் என்பதற்காக அவர் இப்படி செய்துள்ளார். இதனால் அவருக்கு சில நிமிடங்கள் புகழ் கிடைக்கும்.
அதை அவர் அனுபவித்துக் கொள்ளட்டும். இன்று ஒரு சமுகவலைதளக் கணக்கு இருந்தால் யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றியும் பேசலாம். இந்த குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்ள முடிவு செய்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.