விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு - வைரலாகும் பெண்ணின் போஸ்ட்!
விஜய் சேதுபதி, ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக உபயோகப்படுத்திக்கொண்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவர் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் வெளியானது.
இந்நிலையில் ரம்யா மோகன் என்பவர் விஜய் சேதுபதி மீது சில குற்றச்சாட்டுகளை முன் வைத்து தனது X தளத்தில் பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார். அதில், "கோலிவுட்டில் நடக்கும் Casting Couch (நடிகர்களை தேர்ந்தெடுக்கும் படலம்) கலாச்சாரம் ஒன்றும் நகைச்சுவை இல்லை.
எனக்கு தெரிந்த ஊடகத்தில் இருக்கும் ஒரு பெண், அவருக்கு தெரியாத இந்த உலகில் சிக்கிக்கொண்டார். இப்போது அவர் மறுவாழ்வு மையத்தில் (Rehab) இருக்கிறார். போதை பொருள், ஏமாற்று வேலை, நிதி இழப்பு என அனைத்தையும் அவர் சந்தித்து இருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி ‘கேரவனில் உதவி செய்வதற்காக” 2 லட்சம் வரை கொடுத்து,
அந்த கேரவனை ஓட்டுபவர்களுகு ரூ.50 ஆயிரம் வரை கொடுத்திருக்கிறார். அவர், சமூக வலைதளத்தில்தான் பெரிய மகான்போல் தன்னை காட்டிக்கொள்கிறார். அந்த பெண்ணை விஜய் சேதுபதி பல வருடமாக ஏமாற்றியிருக்கிறார். இது ஒரு சம்பவம், ஆனால் மீடியாவால் புகழப்படுபவர்கள் நிறைய பேர் இயல்பு வாழ்க்கையில் இப்படி இருக்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டு
மேலும், “இங்கு நிறைய பைத்தியக்காரர்கள், குற்றம் சாட்டப்பட்ட நபரை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, யார் இந்த தகவலை வெளியிடுகிறார்களோ அவர்களை மட்டும் டார்கெட் செய்கின்றனர், இல்லையென்றால் பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சாட்டுகின்றனர்.
Idhuva parunga 👀? Already neraya per ss potanga pola pic.twitter.com/P12RDZPBaw
— Mr.Blank (@reticent_bloke) July 29, 2025
இந்த உண்மை, பாதிக்கப்பட்ட பெண்ணின் டைரி மற்றும் செல்போன் உரையாடல்களை படிக்கும் போது தெரிய வந்தது. இது ஒரு கற்பனை கதை அல்ல, இது அந்த பெண்ணின் வாழ்க்கை, அவரது வலி” என்றும் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து டெலிட் செய்யப்பட்டது. இதுகுறித்து புகார் கூறிய பெண், “விரக்தியிலும், என் மனக்கசப்பிலும் அந்த ட்வீட்டைப் பகிர்ந்தேன். அதற்கு இவ்வளவு கவனம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இப்போது அதைப் பற்றி நிறைய கேள்விகள் வருகின்றன.
அந்த பெண்ணுடைய தனியுரிமை மற்றும் நல்வாழ்வின் மீதான அக்கறையால், அதை நீக்க முடிவு செய்துள்ளேன். அது மதிக்கப்படும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.