ஆன்லைன் காதல்; எதிர்த்த குடும்பம் - நிச்சயதார்த்தத்தில் தான் மனைவியை முதல்முறை பார்த்த விஜய்சேதுபதி!
விஜய்சேதுபதி காதல் குறித்த தகவல்கல் கவனம் பெற்று வருகிறது.
விஜய்சேதுபதி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய்சேதுபதி. ரசிகர்களுக்கு பிடித்தமான மக்கள் செல்வனாக வளர்ந்து வருகிறார். பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். அண்மையில், இவர் நடித்த மெர்ரி கிறிஸ்துமஸ் படம் ரிலீஸானது.
இந்தப் படத்தில் கத்ரீனா கைஃப் நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், முன்னதாக இந்தப் பட விளம்பரத்திற்கான பேட்டியில் பேசிய விஜய் சேதுபதி தனது காதல் குறித்து மனம் திறந்துள்ளார். அதில், நடிகராவதற்கு முன் பல வேலைகளை செய்துள்ளார். வளைகுடாவில் கணக்காளராகவும் பணியாற்றிய நேரத்தில்தான் ஜெஸ்ஸி அறிமுகமாகியுள்ளார்.
காதல் திருமணம்
இருவரும் ஒரு பரஸ்பர நண்பர் மூலம் அறிமுகமாகியுள்ளனர். கொல்லத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெஸ்ஸி சென்னையில்தான் வளர்ந்துள்ளார். இருவரும் பார்க்காமலேயே ஆன்லைன் சாட்டிங் மூலம் காதலித்துள்ளனர். ஆனால், இதற்கு அவர்களது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால், பேசி சம்மதிக்க வைத்துள்ளனர். அதன்பின், நிச்சயதார்த்தத்திற்காக வீட்டிற்கு வந்தபோது தான் ஜெஸ்ஸியை சந்தித்துள்ளார். அதனையடுத்து தனது 23 வயதில் ஜெஸ்ஸியை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.