விஜய் - சங்கீதா பிரிந்திருக்க இப்படி ஒரு காரணமா? பிரபலம் சொன்ன சீக்ரெட்!
விஜய் - சங்கீதா பிரிவு குறித்து பத்திரிகையாளர் சங்கர் பல தகவல் தெரிவித்துள்ளார்.
விஜய் - சங்கீதா
நடிகர் விஜய் கடைசியாக GOAT படத்தில் நடித்தார். தொடர்ந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதனை ஹெச்.வினோத் இயக்குகிறார். இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார்.
2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக களம் காண்கிறது. அக்கட்சியின் முதல் மாநாடு அண்மையில் நடைபெற்றது. அதில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். விஜய்யின் தாய் ஷோபாவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் கலந்துகொண்டார்கள்.
ஆனால், விஜய்யின் மனைவி சங்கீதா, மகன் சஞ்சய், மகள் சாஷா ஆகிய மூன்று பேரும் மாநாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பத்திரிகையாளர் சங்கர், “விஜய்யும், சங்கீதாவும் நிரந்தரமாக பிரிந்துவிட்டார்களா என்பது குறித்து தெரியாது.
அதிர்ச்சி தகவல்
ஆனால் ஜோதிடர் ஒருவர் விஜய்யிடம், நீங்கள் பிரம்மச்சரியம் இருந்தால் ஆட்சியை பிடிக்கலாம் என்று சொன்னதாக சொல்கிறார்கள். அந்த கடலூர் ஜோதிடர் விஜய்யின் வாழ்க்கையில் முக்கியமான ரோல் வகிக்கிறார்.
எனவே அந்த ஜோதிடர் ஒருவேளை அப்படி சொல்லியிருந்தால் தனது மனைவியை விஜய் பிரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் சினிமாக்காரர்களின் வாழ்க்கையில் ஜோதிடர்களின் பங்கு முக்கியத்துவமாக இருக்கும்.
ஆனால் ஒன்று விஜய் இப்போது பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டார். கலைஞர் கருணாநிதியோ, எம்ஜிஆரோ தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை மறைத்து வைத்ததில்லை. எனவே சங்கீதா குறித்து விஜய் தெளிவுப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.