உறுதியான விஜய் - சங்கீதா விவாகரத்து? வருந்தும் ரசிகர்கள்!
நடிகர் விஜய் தனது தாய்க்காக கோவில் ஒன்றை கட்டியுள்ளார்.
விஜய்-சங்கீதா
நடிகர் விஜய் கடந்த சில நாள்களுக்கு முன்பு சாய்பாபா கோவில் ஒன்றில் அர்ச்சகர்களுடன் நிற்பது போன்று புகைப்படம் வெளியாகி வைரலானது. அந்தப் படம் ஷீர்டி சாயிபாபா கோயிலில் எடுக்கப்பட்டது என்றுக் கூறப்படுகிறது.

மேலும், சென்னை கொரட்டூரில், 'சாயி மந்திர்' ஆலயம் கட்டி முடிக்கப்பட்டுக் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. அந்த ஆலயக் கும்பாபிஷேகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்தும் கலந்துகொண்டார்.
விவாகரத்து?
தற்போது, இந்தக் கோவில் விஜய் கட்டியது என உறுதியாகியுள்ளது. இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகத்துக்குப் பிறகு நடிகர் விஜய் இரண்டு முறை வந்து வழிபட்டுச் சென்றார். விஜய்யின் தாயாரும் தந்தை மற்றும் மகன் அடிக்கடி அடிக்கடி இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுகிறார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இங்கு அவரது மனைவி சங்கீதா வந்து சென்றதாக எந்த தகவலும் இல்லை. இதையறிந்த ரசிகர்கள் இருவரும் விவாகரத்து செய்துவிட்டதாக பரவும் வதந்தி உண்மைதானா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த ஆலயத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil