ஒரே வீட்டில் தனியாக... விஜய் மனைவி சங்கீதா கேட்பது என்ன?
பிரபல நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தால், இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது, 2021ம் ஆண்டில் இருந்து ஒரே வீட்டில் தனித்தனியாக வாழ்ந்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

அவர்களின் உறவு பற்றி எனக்கு தெரியவந்ததும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன், நடிகையுடனான தொடர்பை முறித்துக்கொள்வதாக கூறினார், ஆனால் அது தொடர்ந்து கொண்டே இருந்தது.
தட்டிக்கேட்டதால் வீட்டில் எனக்கான உரிமைகளை நிறுத்திவிட்டார், கட்டுப்பாடுகளையும் விதித்தார், விஜய் அந்த நடிகையுடன் வெளிநாடு சென்றிருக்கிறார், அங்கு எடுத்த புகைப்படங்களை நடிகையே பதிவிட்டார்.
அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. ஆனால், அந்த பதிவுகளுக்கு விஜய் மறுப்புத் தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரித்தார்.
பொது வெளியில் நன்மதிப்பை கெடுக்கக்கூடாது என்பதால் நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை. கணவரிடம் ஏதேனும் அழுத்தம் வந்தால் அந்த நடிகையின் பெயரை வெளியிடுவேன்.
தேவைப்பட்டால் எனது கணவருடன் உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2-வது எதிர்மனுதாரராக சேர்ப்பேன்.
தனியாக வாழ்ந்து வருகிறேன், அவரது வருவாயை கருத்தில்கொண்டு எனக்கு ஜீவனாம்சம் வாங்கித் தர வேண்டும்.
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எங்களது திருமணத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும், வழக்கில் இறுதிமுடிவு எட்டப்படும் வரை நீலாங்கரையில் உள்ள எனது புகுந்த வீட்டில் வசிக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
