திருமணத்தை மீறிய உறவு: விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல்

Vijay
By Fathima Feb 27, 2026 11:10 AM GMT
Report

தவெக தலைவரான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார், சட்டப்பேரவை தேர்தலில் இக்கட்சி போட்டியிடவுள்ளது.

கடந்த 1999 ஆகஸ்ட் 25 அன்று இலங்கையை பூர்வீகமாக கொண்ட சங்கீதாவை திருமணம் செய்து கொண்டர்.

திருமணத்தை மீறிய உறவு: விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் | Vijay Sangeetha Divorce Case Filed

இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர், ஜேசன் சஞ்சய் அறிமுக இயக்குனராக களமிறங்குகிறார்.

இதற்கிடையே செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி சங்கீதா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கடந்த சில மாதங்களகவே விஜய் – சங்கீதா உறவில் விரிசல் விழுந்திருப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், மனுத்தாக்கல் செய்துள்ள சம்பவம் விஜய்யின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்தை மீறிய உறவு: விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் | Vijay Sangeetha Divorce Case Filed

குடும்பத்திற்கு அவமானம்

குறித்த மனுவில் சங்கீதா சார்பில், விஜய்யுடன் இருந்த புகைப்படங்களை நடிகை பகிர்ந்ததால குடும்பத்திற்கு அவமானம்.

சம்பந்தப்பட்ட நடிகையோடு விஜய் வெளிநாடுகளுக்கு சென்றார், அதை அந்த நடிகையே பகிர்ந்தார்.

பொதுவெளியில் நன்மதிப்பை கெடுக்ககூடாது என்பதால் நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

மேலும் விஜய்யின் திருமணத்தை மீறிய ஒரு உறவு துரோகம், வார்த்தைகளால் அலட்சியப்படுத்தியதால் தனித்து வாழ தள்ளப்பட்டேன், நடிகையுடன் உறவை முறித்துக்கொள்வதாக கூறினாலும் அதை தொடர்ந்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.