விஜய் சொன்ன வார்த்தை - கொந்தளித்து இலங்கை அதிபர் செய்த செயல்!
இலங்கை அதிபர் திடீரென கச்சத்தீவுக்கு சென்று பார்வையிட்டார்.
விஜய் பேச்சு
மதுரையில் மாநாட்டை நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்கு, கச்சத்தீவை மீட்பதே ஒரே தீர்வு.
அதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து விஜய்யின் இந்த பேச்சுக்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹேரத் கண்டனம் தெரிவித்தார்.
அனுரா செயல்
இந்நிலையில் இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே யாழ்ப்பாணத்துக்கு 2 நாள் பயணமாக புறப்பட்டார். அங்கு மயிலட்டி துறைமுகத்தை பார்வையிட்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினார்.
பின் கச்சத்தீவை சுற்றிப் பார்த்து கடற்படை அதிகாரிகளுடன் சிறிது நேரம் பேசினார். அப்போது பேசிய அவர். கச்சத்தீவு எங்களுடைய பூமி, அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது.
இலங்கை மக்கள் நலனுக்காக, கச்சத்தீவைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன். எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன் என தெரிவித்துள்ளார்.